IDFC உள்ளிட்ட தகுதி இல்லாத நிதி நிறுவனங்களின் உரிமம் ரத்து,
IDFC மற்றும் ரிலையன்ஸ் வணிகம் உட்பட 17 NBFC நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உரிமம் (லைசென்ஸை) ரத்து செய்த இந்திய ரிசர்வ் வங்கி. IDFC லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 20 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழை RBI வசம் திருப்ப ஒப்படைத்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னால் வணிகத்திலிருந்து வெளியேறுதல், இணைப்புகள் மற்றும் நிறுவனங்களை மூடுதல் மற்றும் பணியாளர்கள் நடத்தும் மோசடி குறித்து புகார் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதன் அடிப்படையில் 17 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
இது தவிர, மேற்கு வங்காளத்தில் பதிவுசெய்யப்பட்ட 17 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் வெளியிடப்படவில்லை. காமதேனு நிதி நிறுவன தனியார் நிறுவனத்தின் உரிமம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு அதிகாரசபை மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்ப டி, மான்வே இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை NBFC வணிகத்திலிருந்து வெளியேறியதால் தங்கள் சான்றிதழ்களைத் திருப்பி அனுப்பியுள்ளன. அதே நேரத்தில், ஐடிஎஃப்சி லிமிடெட், ஐடிஎஃப்சி ஃபைனான்சியல் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் மற்றும் 16 பிற நிறுவனங்கள் இணைப்பு அல்லது பிற சட்ட காரணங்களால் தங்கள் சான்றிதழ்களைத் திருப்பி அனுப்பியுள்ளன.
வங்கி செயல்பாட்டில் பணி செய்து வரும் பகுதியில் உள்ள பணியாளர்கள் வாடிக்கையாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கமிஷன் பார்க்க சின்டிகேட் அமைத்து செயல்படுகிற நிலையில் வாடிக்கையாளர்கள் நேரடியாக தலைமை அலுவலகத்தை இந்த நபர்கள் கூட்டணி தொடர்பு கொள்ள விடுவதில்லை , மேலும் வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசுதல் செய்து பணம் கமிஷன் பெறுகின்றனர். இது தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் வைத்தியநாதன் அறிவாரா என்பது தெரியவில்லை ஆனால் அதை ரிசர்வ் வங்கி அறிந்த நிலையில் தான் தற்போது லைசென்ஸ் ரத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட அலுவலகம்: IDFC FIRST வங்கி லிமிடெட், KRM டவர், 7வது தளம், எண்.1, ஹாரிங்டன் சாலை, சேட்பேட், சென்னை - 600031, தமிழ்நாடு, இந்தியா
நிறுவன அலுவலகம் மற்றும் கார்ப்பரேட் அலுவலக முகவரி: IDFC FIRST வங்கி லிமிடெட், தி ஸ்கொயர், C-61, G பிளாக், தரை தளம் முதல் 8வது தளம் வரை பாந்த்ரா குர்லா வளாகம், பாந்த்ரா கிழக்கு, மும்பை - 400051. எந்தவொரு கடன் வழங்குனரிடமும் கடன் பெறுவதற்கு முழுமையான விசாரணையை மேற்கொள்ளுங்கள். கடன் வழங்குபவர் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அல்லது பிற ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகாரம் பெற்றவரா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கேட்கும் கடன் வழங்குனர்கள் மோசடிக்காரர்களாக இருக்கலாம். பொதுவாக கடன் வழங்குனர்கள் உங்களுடைய விவரங்களையும் கேட்டு தான் கடன் தருவார்கள். ஆதார் கார்டு நம்பர், பான் கார்டு நம்பர் போன்ற விவரங்களை கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை எல்லாம் கேட்டால் அவை மோசடிக்காரரின் யுக்தியாக இருக்கலாம். இது போன்ற விவரங்களை வைத்து மோசடிக்காக பயன்படுத்தலாம். எனவே உங்கள் தனிப்பட்ட தகவல்களான பாஸ்வேர்ட், யுபிஐ பின் நம்பர் போன்ற விவரங்களை ஒருபோதும் கடன் வழங்குநர்கள் கேட்க மாட்டார்கள்.
ஒரு கடன் வழங்குனரின் வட்டி விகிதங்கள், தொடர்பு விவரங்கள், ஏற்கனவே கடன் பெற்றவர்களின் ரிவ்யூகள் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே கடன் வழங்குனரை தேர்வு செய்ய வேண்டும். கடன் ஆவணங்களைச் சரிபார்க்கவும்: கையொப்பமிடுவதற்கு முன் அனைத்து கடன் ஒப்பந்தங்களையும் ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். வட்டி விகிதங்கள், திருப்பிச் செலுத்தும் அட்டவணைகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் உட்பட அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் விவரங்கள் தெளிவாக இல்லை என்றால், கடன் வழங்குபவரிடம் விளக்கம் பெறவும். தனிப்பட்ட தகவல்களை கேட்கும் கடன் வழங்குனருடன் எச்சரிக்கையாக இருங்கள்: உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கேட்கும் கடன் வழங்குனர்கள் மோசடிக்காரர்களாக இருக்கலாம். பொதுவாக கடன் வழங்குனர்கள் உங்களுடைய விவரங்களையும் கேட்டு தான் கடன் தருவார்கள். ஆதார் கார்டு நம்பர், பான் கார்டு நம்பர் போன்ற விவரங்களை கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை எல்லாம் கேட்டால் அவை மோசடிக்காரரின் யுக்தியாக இருக்கலாம். இது போன்ற விவரங்களை வைத்து மோசடிக்காக பயன்படுத்தலாம். எனவே உங்கள் தனிப்பட்ட தகவல்களான பாஸ்வேர்ட், யுபிஐ பின் நம்பர் போன்ற விவரங்களை ஒருபோதும் கடன் வழங்குநர்கள் கேட்க மாட்டார்கள். முன்கூட்டியே செலுத்தப்படும் கட்டணம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: புகழ்பெற்ற கடன் வழங்குனர்கள் கடன் செயலாக்கத்திற்கு முன்கூட்டியே கட்டணங்களை கேட்க மாட்டார்கள். கடனுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டதற்கு முன் கட்டணம் கேட்கும் எந்த ஒரு கடன் வழங்குனராக இருந்தாலும் சந்தேகத்துடன் கருதப்பட வேண்டும். மோசமான கிரெடிட் வரலாறுகளைக் கொண்டவர்களுக்கு எளிதான கடன்களை உறுதியளிக்கும் சலுகைகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை மோசடி செய்பவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களாக இருக்கலாம்.
கருத்துகள்