இந்தியாவில் காசி தமிழ் சங்கமம் (KTS) 3.0 இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி, வரை உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற உள்ளது.
இந்த மதிப்புமிக்க கலாச்சார முயற்சி தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பண்டைய நாகரிக பிணைப்பைக் கொண்டாடுவதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு, இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் முதல் முறையாக, பங்கேற்பாளர்கள் பிரயாகராஜில் மஹாகும்பமேளாவைக் காணவும் , அயோத்தியில் புதிதாகத் திறக்கப்பட்ட ராமர் மந்திரைப் பார்வையிடவும் முடியும். இந்த ஆண்டு நிகழ்வின் முக்கிய கருப்பொருள் அகஸ்தியரின் சித்த மருத்துவ முறை (பாரதிய சிகிச்சை), பாரம்பரிய தமிழ் இலக்கியம் மற்றும் தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கு அவர் அளித்த பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதாகும்.
கருத்துகள்