தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு 'Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை
அமைச்சகம் உத்தரவு. ''Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பர்; விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும். சமீபத்தில் விஜய் மேற்கொள்ளபா போகும் பயணங்களில் முட்டை அடிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ட்விட்டரில் நடந்த குழு உரையாடல்களில் பேசியது டிரெண்டான நிலையில் இந்தப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு.
இந்தியாவில் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு அளவுகோல்களை வைத்துள்ளதன்படி பாதுகாப்பு தேவையின் அடிப்படையில், அவர்களுக்கு X, Y, Z, Z+ போன்ற பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளன.
முதலாவது.:-X கேட்டகரி (X Category Security) இது மிகக் குறைந்தபட்ச பாதுகாப்பு அளவாகும்.
பாதுகாப்பு பெறும் நபருடன் 2 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் (ஒரு முறை ஒருவர்) வழங்கப்படும்.
காவல்துறை அல்லது பிற பாதுகாப்பு அமைப்புகளால் இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.
இரண்டாவதாக.:- Y கேட்டகிரி
இது X பாதுகாப்பை விட சிறிதளவு உயர்ந்தது.5 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்குவர் (2 நபர்கள் குடியிருப்பு பாதுகாப்புக்கு, 3 நபர்கள் கூடவே இருப்பார்கள்).மாநில காவல் துறை அல்லது மத்திய பாதுகாப்புப் படைகள் இதை வழங்கலாம்.
மூன்றாவது :-Z கேட்டகரி (Z Category Security)
இது முக்கியமான அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் போன்றோருக்கு வழங்கப்படும். 22 பாதுகாப்பு வீரர்கள் இதில் இருப்பர். (பொதுவாக CRPF அல்லது NSG வீரர்கள்) முழுநேர ஆயுதத்துடன் பாதுகாப்பு வழங்கப்படும். ஒரு எஸ்கார்ட் வாகனம் அடங்கும்.
நான்காவது.:-Z+ கேட்டகரி
மிக உயர்ந்த நிலை பாதுகாப்பு. முன்னாள் பிரதமர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய அமைச்சர்கள் போன்றோருக்கு வழங்கப்படும். 55 பாதுகாப்பு வீரர்கள் இதிலிருப்பர் (முக்கியமாக NSG கமாண்டோக்கள்).
பல எஸ்கார்ட் வாகனங்களும் சிறப்பு பாதுகாப்பு ஆயுதங்களும் வழங்கப்படும்.
ஐந்தாவதாக.SPG பாதுகாப்பு (SPG Security) இது பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும். Special Protection Group (SPG) இந்த பாதுகாப்பை வழங்குகிறது. முன்னாள் பிரதமர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் மட்டும் இது வழங்கப்படும்.
இந்த பாதுகாப்பு நிலைகள் ஏற்கனவே இருக்கும் மிரட்டல் நிலை, புலனாய்வுத் தகவல்கள், அரசியல் முக்கியத்துவம் ஆகியவை அடிப்படையில் வழங்கப்படும்.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு 'Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பார்கள்.
பொதுவாக 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பர்; விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் இந்த வருடம் தமிழ்நாடு ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.இதில் பொது நீதி யாதெனில் நடந்துமுடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் நடிகர் சீமான் பாஜகவின் சோதனை முயற்சியில் தோல்வியடைந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் முன்னாள் முதல்வர் அளவில் இனி கட்டமைக்க முயற்சி நடக்கிறது அதன் விளைவே தேர்தல் வியூக நிபுணராக அறியப்பட்ட பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு மற்றும் உள்துறை வழங்கிய y பிரிவு பாதுகாப்பு அணைத்து நடவடிக்கைகளும்
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் பிரபலமாகி இருந்தாலும் விஜயின் கட்சி பிரபலமில்லை . விஜய் கட்சிக்கு என்று வார்டு ரீதியாக நிர்வாகிகள் இல்லை.
இதை எல்லாம் உருவாக்க பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்கு ஒரு ஷார்ட் கட் உள்ளது. அது நடைபயணம். இதற்காக நடைப்பயணத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் விஜய்க்கு 'Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள்