பெருகும் இட்லிச் சந்தைகள் அவிநாசி மற்றும் ஈரோடு பகுதியில் உள்ளது போல அணைத்து ஊர்களில் இப்போது ஒரே இடத்தில் தயாரிப்பாகும் இட்லி தான் அணைத்து உணவகங்களிலும் விற்பனை ஆகிறது.
தமிழன் உணவாக மட்டுமே இருந்த இட்லி இப்போது சர்வதேச இட்லி தினம். என 2015 ஆம் ஆண்டில் சென்னையில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி சர்வதேச இட்லி தினத்தை கொண்டாடி வருகிறது..
அதே போல உலகின் பல பகுதிகளிலும் தற்போது இந்த சர்வதேச இட்லி பிரபலமான நிலையில் அது வெவ்வேறு வகைகளில் அவரவர் விருப்பம் போல் களைகட்டுகிறது. முதலில் ஈரோடு கருங்கல்பாளையம் இட்லி சந்தை :-
திருநகர் காலனியில் தான் இட்லி சந்தை செயல்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர், அருகே உள்ள கால்நடை சந்தைக்கு வருகிற வியாபாரிகளை இலக்காக வைத்து ஒரு சிலர் இட்லி வியாபாரம் செய்தனர். இப்போது இது இட்லி சந்தையாகவே விரிவடைந்தது.
காலை 7 மணி முதல் இரவு வரை
நடக்கும் சந்தையில் இட்லி வியாபாரம் மாலை 5 மணி அல்லது சில கடைகளில் இரவு 10 மணி வரை களை கட்டும். ஈரோடு மாநகரின் பல ஹோட்டல்களுக்கும் இட்லி மொத்தமாக இங்கிருந்து தான் போகிறது. இந்த இட்லி சந்தையில் ஒருநாளைக்கு சர்வ சாதாரணமாக 20,000- இடலிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தனபாக்கியம் இட்லி வியாபாரம் செய்து வந்த மூதாட்டி 25 பைசாவுக்கு தொடங்கிய, இந்த இட்லி சந்தையின் பிதாமகள் என்கின்றனர் உள்ளூர் மக்கள் . இப்போது உள்ளூர் முழுவதும் இட்லி சந்தையில் வியாபாரம் இங்கு தான் நடக்கிறது. அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், வீட்டு விஷேடங்கள் என அனைத்துக்கும் மொத்தமாக இந்தச் சந்தையில் தான் 'இட்லி ' கொள்முதல் செய்கின்றனர்.
மொத்தமாக இட்லி கொள்முதல் செய்யும் ஹோட்டல்கள், அசைவக் குழம்பு வகைகள், சாம்பார், சட்னி வகைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர். பொதுவாக பெரும்பாலான இட்லி சந்தை கடைகளில், விறகு அடுப்புகளையே பயன்படுத்துகின்றனர்.
வெளியூர், வெளிநாடுகளுக்கும் இட்லி சந்தையிலிருந்து சமையல் மேஸ்திரிகள் சென்று, இட்லி தயார் செய்து கொடுக்கின்ற 'ஆர்டர்' வகையும் இங்கே கிடைக்கும். கொரோனா காலத்தில் இந்த இட்லி சந்தை மிகப் பெருமளவில் கை கொடுத்து உதவியிருப்பதை உள்ளூர் மக்கள் நினைவு படுத்து கின்றனர். ஈரோடு இட்லி கடையில் மொத்த விலையிலும் கிடைக்கும். அங்கு சாப்பிடுவதற்கும் வசதிகள் உண்டு.
ஈரோடு இட்லி சந்தையின் இட்லி சுவையாக இருப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம் மக்களே! வீடுகளில் நாம் இட்லி மாவில் வெந்தயம் சேர்ப்பதற்குப் பதிலாக இஙகு ஆமணக்கு சேர்க்கின்றனர். இதனால் இட்லி மெதுமெதுப்புடனும் இட்லி தட்டுகளில் ஒட்டாமலும் இருக்கிறதாம். அது 1990 காலங்களில் நடிகை குஷ்பு பெயரில் அழைக்கப்பட்டதுஆரம்ப காலகட்டத்தில் இது மாடுகள் வியாபாரம் செய்து வந்த நிலையில் இப்போது மாட்டுச் சந்தை வேறு இடத்துக்கு மாறியதாலும் காலை முதலே 'ஆவி பறக்கும்' இட்லி வியாபாரம் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் களைகட்டுகிறது! அதே போல அவிநாசி பகுதியில் ஒரு குடும்பம் நான் ஒன்றுக்கு இரண்டு லட்சம் இட்லிகள் தயாரிப்பு செய்து விற்பனை செய்யும் நிலையில் இது நாடு முழுவதும் பரவுகிறது. குறிப்பாக உணவகங்கள் ஆரம்ப காலத்தில் தயாரிப்பு செய்யும் இடம் மற்றும் ஆட்கள் பார்த்து தான் உணவுகள் வாங்குவது நடந்த நிலையில் இப்போது எங்கே எந்த உணவாக இருந்த போதிலும் மக்கள் ருசி மட்டுமே பார்க்கும் நிலையில் இது எங்கு யார் தயாரிப்பு செய்தாலும் வாங்கும் நிலையில் உள்ள மக்கள் வந்துள்ள நிலையில் சைவம் தனி அசைவம் தனி என்ற சூழல் மறைகிறது.
கருத்துகள்