டெல்லியில் பாஜகவின் மஹிளா மோர்ச்சா சார்பில் இராணி வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் ஹிந்தியில் அரங்கேற்றம்
டெல்லியில், இந்திய வரலாற்றில் பெருமை சேர்க்கும் வகையில், சரித்திர புகழ்மிக்க
சிவகங்கை சமஸ்தானத்தின் மூன்றாவது இராணி வீரமங்கை வேலுநாச்சியார் வீர வரலாற்றை ஹிந்தியில் எடுத்துரைக்கும் நாட்டிய நிகழ்ச்சி மற்றும் மேதகு ராணி வேலு நாச்சியாரின் புத்தக வெளியீட்டு விழாவில், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் ஆற்காடு நவாப் கூட்டணியை மைசூர் ஹைதர் அலி படைத் தளபதி திப்பு சுல்தான் ஆதரவில் வென்று
சிவகங்கை சமஸ்தானத்தின் விடுதலை பெற்ற வரலாற்று வீரமங்கை இராணி வேலு நாச்சியார் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உரையாற்றிய நிகழ்வு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாஹிபா ஸ்ரீமத் முத்து விஜயரகுநாத கௌரி வல்லப D.S.K மதுராந்தகி நாச்சியாரை கௌரவித்தார்.
இராணி வேலு நாச்சியரின் தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் பாரதிய ஜனதா கட்சியி மஹிளா மோர்ச்சா ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டார். ஒரு நாடக அஞ்சலி ஏற்கனவே தமிழில் சிவகங்கையில் அரங்கேற்றம் செய்ததை ஹிந்தியில் நடந்திய நிகழ்வில் நிகழ்த்திக் காட்டப்பட்டது. இந்தியாவிலுள்ள 626 சமஸ்தானத்தில் ஒன்றாக ராணி ராணி வேலு நாச்சியரின் சிவகங்கை மரபுக் கொண்டாட்டம் இந்தியாவின் மொழியியல் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது மற்றும்
பன்முகத்தன்மையில் இந்தியாவின் ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.வேலு நாச்சியார், சிவகங்கையின் ராணியும், ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இவர் திப்பு சுல்தானின் ஆதரவுடன், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போரிட்டார்.
வேலு நாச்சியாரின் வீரத்தையும், உறுதியையும் கண்டு திப்பு சுல்தான் அசந்துபோனார், அவருக்கு உதவ முன்வந்தார். திப்பு சுல்தான், வேலு நாச்சியாரை ஆதரித்து, அவருக்கு சிறப்பு பீரங்கிப் படையையும், படை வீரர்களையும் வழங்கினார்.
வேலு நாச்சியார், திப்பு சுல்தானின் ஆதரவுடன், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போரிட்டார். திப்பு சுல்தான்
வேலு நாச்சியார் வழிபட திண்டுக்கல் கோட்டையில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றையும் கட்டிக் கொடுத்தார். விருப்பாச்சி கோபால் நாயக்கர், சிவகங்கை ராணி வேலுநாச்சியாரை ஆதரித்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்ட ஒரு விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் சிவகங்கை சீமையில் வேலுநாச்சியாரின் கணவர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டோ அல்லது ஆலய நுழைவாயிலில் அவரது இரண்டாவது மனைவி கௌரி நாச்சியார் உடன் காளையார் கோவிலில் குண்டு வீச்சு காரணமாக வீர மரணம் அடைந்த மன்னர் முத்து வடுக நாதத் தேவருக்குப் பின், வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் தந்து, மந்திரி பிரதானி மருது பாண்டியர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டார். இவர் விருப்பாச்சி பாளையக்காரர், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்ட பாளையக்காரர்களில் ஒருவர்.
சிவகங்கை ராணி வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் தந்து, மருது பாண்டியர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டார்.
இவர் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் சம காலத்தவர். இவரது இயற்பெயர் திருமலை குப்பள சின்னய்யா நாயக்கர்.
1725 ஆம் ஆண்டில் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரையா நாயக்கர் - காமாட்சியம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர்.
ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட பெரும் வரிக்கு எதிராக பாளையக்காரர்கள் போரிட்டனர்.
புரட்சிப்படையினர் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்புப் பண்டங்களையும் பறித்தனர்.வீரப் போர் புரிந்த மாவீரர்களில் ஒருவரான திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சி பாளையக்காரரான கோபால் நாயக்கர் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட
திண்டுக்கல் நகரின் மையப் பகுதி 'வரலாற்று கல்வெட்டு' எதுவும் இல்லாமல் வாக்கிங் போகிற இடமாக மட்டுமே காட்சி தருவதுதான் எத்தனை கொடூரம்!மதுரையை நாயக்கர்கள் ஆண்ட போது மொத்தம் 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். இந்த பாளையங்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகிலுள்ள விருப்பாச்சி பாளையம். சிவகங்கை சீமையில் வேலுநாச்சியார் கணவர் ஆங்கிலேயருடான யுத்தத்தில் வீரமரணத்தைத் தழுவ, தமது தளபதிகள் மருது பாண்டியர்களுடன் தத்தளித்த அவருக்கு அடைக்கலம் தந்தவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர்.
இன்றைக்கு வீரமங்கை வேலுநாச்சியாரும் மாமன்னர்கள் மருது சகோதரர்களும் வரலாற்றில் அழியா வீரப் புகழ் பெற்றிருக்கின்றனர் என்றால் அதற்கு விருப்பாச்சி கோபால் நாயக்கரின் அரவணைப்பும் அடைக்கலமும் தான் ஆணிவேர். அவர்கள் வெற்றி பெற படை உதவி செய்த மைசூர் மன்னர் ஹைதர் அலி அவரது தளபதி திப்பு சுல்தான் உதவியும் ஒரு காரணம்.அதே போல் சிவகங்கை சமஸ்தானத்தின் வாரிசு அடிப்படையில் மன்னர்கள் மற்றும் இராணி கள் அமையவில்லை இதை நீதிமன்றத்தின் மூலம் அரசியல் தான் தீர்மானிக்கிறது , மூத்த வாரிசு அடிப்படையில் மன்னர் ஆகும் சூழல் இருந்திருந்தால் தற்போது சிவகங்கை இராஜாவாக கௌரி வல்லப துரைசிங்க இராஜா மூத்த மகன் காலஞ்சென்ற சுப்பிரமணிய ராஜா மகன் சண்முக ராஜா தான் அந்த பொருப்புக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் அரசியல் சூழல் தான் இளைய வாரிசு வழி வந்த கார்திகேய ராஜா மகள் சிவகங்கை சமஸ்தானம் மற்றும் தேவஸ்தானத்தின் இராணியாக உள்ள சூழல் என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு புரியும். அதற்கு தகுந்தாற் போல் இராணிகள் சில காலம் திராவிட அரசியல் தாங்கி இருந்து வந்த நிலையில் தற்போது காவி உடையில் பாஜக சார்ந்த நிலைப்பாடு கொண்டுள்ளனர்.
கருத்துகள்