ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை ஐஐடி யில் பேசிய கருத்துக்கள் .
சென்னை ஐஐடி யில் படிக்கும் 30 சதவீதம் ஆந்திரப் பிரதேச மாணவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
நமது பொருளாதாரம் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா தற்போது கொண்டுள்ளது.இந்தியப் பிரதமர் என்னிடம் சொன்னார் நாம் (5,00,000) ஐந்து லட்சம் மெகாவாட் மின்சார உற்பத்தியை சூரிய ஒளி மூலம் பெற இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அதில் 136 ஜிகாவாட்ஸ் மட்டும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து உற்பத்தி செய்யத் திட்டம். ஒருகாலத்தில் 1 யூனிட் தயாரிக்க 14 ரூபாயாக இருந்ததை இன்று 2 ரூபாயாக மாற்றியாகி விட்டது.
நரேந்திர மோடியின் ஒரு சிரிய தொடக்கம் டிஜிட்டல் இந்தியா கரன்சி ரூபே மூலம் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 16 ஆயிரம் கோடி ரூபே பரிவர்த்தனை நடந்து அதன் மூலம் 2.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு காகித பணமே இல்லாமல் கைமாறிய தொகை.
1 ட்ரில்லியன் = 83 லட்சம் கோடி ரூபாய் 200 லட்சம் கோடி
2014 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தில் உலகில் 10 வது இடமாகவும் 2021 ஆம் ஆண்டில் 5 வது இடத்திலும் 2023 ஆம் ஆண்டில் 4வது இடம் 2026 ஆம் வருடம் நாம் உலகின் 4வது இடத்திலும் 2028 ஆம் ஆண்டில் 3வது இடத்திலும் 2047 ல் உலகின் நம்பர் 1 இடத்திலும் இருப்போம். நரேந்திர மோடி பதவி ஏற்றது 2014 ஆம் ஆண்டில்.
என்டிபிசி நிறுவனம் 1 லட்சம் கோடியை ஆந்திராவுடன் சேர்ந்து ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய ஒத்துழைப்பு. இதன் மூலம் பெருமளவு கச்சா எண்ணெய் வாங்குவது குறையும்.
பேட்டரி, காற்றாலை, சூரிய ஒளி மூலம் இந்தியா முழுவதுமாக நிலக்கரி தெர்மல் ஆலைகளை மூடிவிட்டு இயற்கை மூலம் மட்டுமே நாம் மின்சாரம் தயாரிபோம்.
20 லட்சம் வீடுகளின் மேற்கூரை சூரிய மின்சார திட்டம் விரைவு படுத்தப் படும்.
உலகின் 500 கம்பெனிகளின் CEO க்கள் இந்தியர்கள்.
இவர்தான் ஒரு வாரத்திற்கு முன்னால் எங்கள் ஆந்திரப் பிரதேச மாநில மாணவர்கள் 10 மொழி கூட படிக்க நான் ஆதரவாக இருப்பேன் என்று கூறியது நினைவிருக்கலாம்.
கருத்துகள்