முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜன் பகீதாரி மூலம் தேவையற்ற வணிகத் தொடர்பை (UCC) கட்டுப்படுத்த DoT நடவடிக்கையை தீவிரப்படுத்துகிறது

ஜன் பகீதாரி மூலம் தேவையற்ற வணிகத் தொடர்பை (UCC) கட்டுப்படுத்த DoT நடவடிக்கையை தீவிரப்படுத்துகிறது தொலைத்தொடர்புத் துறையின் ஸ்பேம் எதிர்ப்பு இயக்கத்தில் கிட்டத்தட்ட 1.75 லட்சம் அங்கீகரிக்கப்படாத DID எண்கள் துண்டிக்கப்பட்டுள்ளன சஞ்சார் சாத்தியின் DoTயின் சக்ஷு தொகுதி ஸ்பேமுக்கு எதிராகப் போராடுவதிலும் சைபர் மோசடியை எதிர்ப்பதிலும் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் கடுமையான அபராதங்களைத் தவிர்க்க தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்க நிறுவனங்களை DoT வலியுறுத்துகிறது. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்படாத விளம்பர நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட சுமார் 1.75 லட்சம் நேரடி உள்நோக்கிய டயலிங் (DID)/லேண்ட்லைன் தொலைபேசி எண்களை DoT துண்டித்துள்ளது.   சமீபத்தில், 0731, 079,080 போன்ற தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளிலிருந்து PRI, லீஸ் லைன், இன்டர்நெட் லீஸ் லைன்கள், SIP மற்றும் IPLC ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான ஸ்பேம் அழைப்புகள் வருவது கண்டறிய...

இராமநவமி அன்று, பிரதமர் இராமநாத சுவாமி ஆலயத்தில் புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பார்

ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி இராம நவமி அன்று, பிரதமர் நரேந்திர மோடி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கு பயணம் செய்து ஸ்ரீ அருள்மிகு இராமநாதசுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்து புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி, புதிய பாம்பன் பாலத்தை மாண்புமிகு பிரதமர் திறந்து வைப்பார் என்ற நிலையில்  தற்காலிக திட்டத்தில் பின்வருவன அடங்கும்: 2.08 கி.மீ நீளமுள்ள புதிய பாம்பன் பாலத்தின் திறப்பு விழா மற்றும் ராமேஸ்வரம் - தாம்பரம் (சென்னை) புதிய ரயில் சேவையை தொடங்குதல். இடம் மற்றும் நேரம் - 2025 ஏப்ரல் 6 ஆம் தேதி, மதியம் 12.45 மணியளவில், ராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாத சுவாமி ஆலயம் மைதானத்தில் நடைபெறும். பாம்பன் புதிய ரயில்வே பாலம்  அதிநவீன வடிவமைப்புடனும் மிகச்சிறந்த கட்டுமான நடைமுறைகளுடனும்  கட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அடையாளங்களில் ஒன்றான் பாம்பன் பாலத்தை பழமை மாறாமல் புதுப்பித்து இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்குமாறு கொடுத்துள்ளார்.            பாம்பன் பாலம் - மெயின் லை...

வளர்ந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் 2025

வளர்ந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் 2025 ஐத் தொடங்கி வைத்தார் டாக்டர் மன்சுக் மாண்டவியா 2 நாட்கள் நடைபெறும்  வளர்ந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் 2025 இன் தேசிய சுற்றை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சேவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2025 மார்ச் 16 முதல்  மார்ச் 27 வரை மாவட்ட இளைஞர் நாடாளுமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டபோது இந்த மாபெரும் நிகழ்வுக்கான பயணம் தொடங்கியது. மாவட்ட இளைஞர் நாடாளுமன்றம்-2025 இல் வெற்றி பெற்றவர்கள் 2025 மார்ச் 23 முதல் 31 வரை பல மாநில சட்டமன்றங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில இளைஞர் நாடாளுமன்றத்தில் பங்கேற்றனர். நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 105 மாநில அளவிலான வெற்றியாளர்கள் தேசிய அளவில் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தனது தொடக்க உரையில், இந்த ஆண்டு இளைஞர் நாடாளுமன்றம், வளர்ந்த பாரதத்தின்  தொலைநோக்குடன் ஒருங்கிணைக்கப்பட்ட...

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே பகல் 12 மணிக்கு வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்

நாடாளுமன்ற மக்களவையில்  எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே  பகல் 12 மணிக்கு  வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா மீதான விவாதங்களை முன் வைத்து வருகின்றனர். வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக வக்ஃப் மசோதா திருத்தச் சட்டத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரானது எனவும், வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் என பல்வேறு எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஆங்காங்கே இஸ்லாமிய மக்கள் போராட்டங்களை நடத்தினர். வக்ஃப் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பானதால், அது நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின்னர், பல ...