நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே பகல் 12 மணிக்கு வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்
நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே பகல் 12 மணிக்கு வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா மீதான விவாதங்களை முன் வைத்து வருகின்றனர்.
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக வக்ஃப் மசோதா திருத்தச் சட்டத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரானது எனவும், வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் என பல்வேறு எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், ஆங்காங்கே இஸ்லாமிய மக்கள் போராட்டங்களை நடத்தினர். வக்ஃப் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பானதால், அது நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின்னர், பல திருத்தங்களுடன் மசோதாவை அக்குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்ததன் அடிப்படையில்,
எதிர்க்கட்சிகள் முன் வைத்த திருத்தங்களை நிராகரித்த அரசு, ஆளுங்கட்சிகள் முன்வைத்த திருத்தங்களை மட்டும் ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில், ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைய உள்ளதால், மார்ச் 2 ஆம் தேதி இன்று வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டத்தை நடத்தி, அதில் சில் உத்திகளை வகுத்தனர். இந்தக் கூட்டத்தில்,
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், என்சிபி தலைவர் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறிய போது, ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த மசோதாவுக்கு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மக்களிடம் பொய் பிரச்சாரத்தைப் பரப்புகின்றனர். வக்ஃப் மசோதா சட்டமாக மாறினால், மசூதி உள்ளிட்ட இஸ்லாமியர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொள்ளும் என்பது பொய்யான பரப்புரை. இதனால், பெரும்பாலான இஸ்லாமியர்கள் நலனுக்குத் தான். அதனால் தான், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சிலர் கூட ஆதரவு தெரிவிக்கின்றனர்," எனத் தெரிவித்திருந்தார்.
கருத்துகள்