வளர்ந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் 2025 ஐத் தொடங்கி வைத்தார் டாக்டர் மன்சுக் மாண்டவியா
2 நாட்கள் நடைபெறும் வளர்ந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் 2025 இன் தேசிய சுற்றை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சேவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2025 மார்ச் 16 முதல் மார்ச் 27 வரை மாவட்ட இளைஞர் நாடாளுமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டபோது இந்த மாபெரும் நிகழ்வுக்கான பயணம் தொடங்கியது. மாவட்ட இளைஞர் நாடாளுமன்றம்-2025 இல் வெற்றி பெற்றவர்கள் 2025 மார்ச் 23 முதல் 31 வரை பல மாநில சட்டமன்றங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில இளைஞர் நாடாளுமன்றத்தில் பங்கேற்றனர். நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 105 மாநில அளவிலான வெற்றியாளர்கள் தேசிய அளவில் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளனர்.
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தனது தொடக்க உரையில், இந்த ஆண்டு இளைஞர் நாடாளுமன்றம், வளர்ந்த பாரதத்தின் தொலைநோக்குடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்தார். இளைஞர்களின் உற்சாகத்தை வலியுறுத்திய பிரதமர், 75,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஒரு நிமிட காணொலிகளை சமர்ப்பித்துள்ளனர் என்றார். மாவட்ட மற்றும் மாநில மட்டங்களில் கடுமையான தேர்வுகளுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் இறுதியாக மதிப்புமிக்க நாடாளுமன்றத்தில் கூடுகிறார்கள், இது தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் நிகழ்காலத்தை வடிவமைத்த இடமாகும் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாராட்டிய மத்திய அமைச்சர், வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாடாளுமன்றம் ஒற்றுமையின் அடையாளமாக நிற்கிறது என்று கூறினார். எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், இன்று இருக்கும் இளைஞர்களில் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, அமைச்சர்களாகவோ நாடாளுமன்றத்திற்கு திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தை முன்வைத்தார். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் ஜனநாயகத்தின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், இந்தியாவில், எளிய பின்னணியில் இருந்து வரும் ஒருவர் கூட பிரதமராக முடியும் என்று குறிப்பிட்டார். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் வளர்ந்த பாரதத்தை நோக்கி முன்னேறுவதில் கவனம் செலுத்துமாறு டாக்டர் மாண்டவியா இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்.
வளர்ந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் 2025 இன் போது இந்த இளம் மனங்கள் வழிநடத்திய உரையாடல்கள், இந்தியாவின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே எடுத்துரைத்தார். இந்தியாவை வளர்ந்த பாரதமாக மாற்றும் பிரதமர் திரு மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த, இளைஞர் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்
கருத்துகள்