டாஸ்மாக் ஊழல் வழக்குகளை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி மூத்த வழக்கறிஞர் முறையீடு.
ஊழலுக்கு எதிரான அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையை எதிர்த்து டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் தொடர்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் மார்ச் மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அலுவலர்களைத் துன்புறுத்தக் கூடாது
என தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் ஊழலுக்கு ஆதரவாக தொடரப்பட்டுள்ளதில். இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விலகிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு, தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் மாதம்.28-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் தலைமையிலான அமர்விலேயே முறையீடு செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தினார். மேலும், அந்த அமர்வு எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப நிர்வாக ரீதியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். வழக்கறிஞர் கே.எம். விஜயன் பிரபலமான வழக்கறிஞர் 48 லா சேம்பர் லாலு லா அசோசியேட் சார்பில் வழக்கு தாக்கல் செய்ததில் வாதிட்டார். இவர் போயஸ் தோட்டத்தில் வசிக்கும் நிலையில் இவரது மனு இப்போது பேசு பொருளாகிறது.
கருத்துகள்