மதுரை மாமன்னர் திருமலை நாயக்கர் மஹால் உலகப் பாரம்பரிய தினத்தை முன்னிட்டு கடந்த 18-04-2025 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி நேற்று வரை, என ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள்
கட்டணமின்றிப் பார்வையிட தமிழ்நாடு தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. மேலும், ஏப்ரல் மாதம் 18 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு மரபுசார் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோடைக்கால விடுமுறை நாட்களில் மாணவர்கள் காண அனுமதி தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் மஹால் எனும் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும், இந்தோ-சாரசனிக் பாணியில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது, பிரமாண்டமான 200 தூண்களுக்கு பெயர் பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த அரண்மனையை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.
கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரமும். 248 பிரம்மாண்டமான பெரிய தூண்களில் நேர் வரிசை 200 தூண்களையும் தாங்கி நிற்கின்ற மேற்கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில், இந்த அரண்மனை, இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும், மற்றது அரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. 'சொர்க்க விலாசம்' மன்னரின் வசிப்பிடமாகவும், 'அரங்க விலாசம்' அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.அவர் வாழ்ந்த காலத்தில் உண்மையில் சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டே மன்னர் திருமலை நாயக்கர் இறந்தார் என்பதே வரலாறு. மைசூர் அரசர்கள் நடத்திய மூக்கறு போரில் உடல்நலமின்றி இருந்ததினால் தான் அவர் கிழவன் சேதுபதி எனும் மன்னர் இரகுநாத சேதுபதியை உதவிக்கு அழைத்தார். இராமநாதபுரம் அரசர் கிழவன் சேதுபதிக்கு 46 மனைவிகளுக்கும் வாரிசு இல்லாமல் 47வது மனைவி திருகளாம்பூர் கதலி அவர்தான் பின்னர் பட்டமகிஷி அவர்களுக்கு பிறந்த மகள் தான் சிவகங்கை சமஸ்தானத்தின் முதல் இராணி அகிலாண்டேஸ்வரி நாச்சியார் அதேபோல் மன்னர் திருமலை நாயக்கருக்கு 200 மனைவிகள் உண்டாம் அதோடு அந்தண உவச்சர் பட்டர் குல பெண் அவரது உயிர் காதலி இதனால் தான் திருமலை நாயக்கர் மஹாலில் 200 தூண்கள் மற்றும் 200 அறைகள் ஆரம்ப நிலையில் கட்டிய போது அமைந்த வரலாறு உண்டு என்பது வரலாற்று ஆய்வியல் அறிஞர்கள் கருத்து, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள மஹால் 30 சதவீதம் மட்டுமே ஆகும் . அந்தப் போர் ஒருவாறு முடிந்த பிறகு பதிலடி கொடுக்க அவர் தனது தம்பியான குமாரமுத்துவை அனுப்பி வைத்தார். “நான் நோயால் அவதிப்படுகிறேன் என்பதை மைசூர் அரசர் தெரிந்து கொண்டு நம் நாட்டின் மீது அவர்கள் படையெடுத்தனர்.
ஆகவே நீ உடனே வீரர்களைத் திரட்டி அவர்களைத் துரத்தி அவர்களின் அரசாட்சிப் பகுதி சீமையைப் பிடித்து வரவேண்டியது” என்று கடிதம் ஒன்றை மன்னர் திருமலை நாயக்கர் அனுப்பி வைத்ததாக மெக்கின்ஸி எழுதிய ஓலைச்சுவடி ஆவணம் குறிப்பிடுகிறது.வானளாவிய மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலும் அதன் புது மண்டபங்களும் திருப்பரங்குன்றம், அழகர் கோவில் ஆகிய திருத்தலங்களில் அவர் செய்த திருப்பணிகளும் சித்திரைத் திருவிழா போன்ற பல திருவிழாக்களும் புதுமண்டபம்,
திருமலை நாயக்கர் மஹால் போன்ற அழகு வாய்ந்த பல கட்டடங்களும் வண்டியூர்த் தெப்பக்குளம் போன்ற நீர் நிலைகளும் காலமெல்லாம் மன்னர் திருமலை நாயக்கரின் புகழைச் சொல்லிக் கொண்டிருக்கும். திருமலை நாயக்கர் நடத்திய போர்களையும் அவர் காலத்துச் சமுதாயத்தையும் விளக்கும் வகையில் இராமப்பையன் அம்மானை இரவிகுட்டிப்போர், மதுரைவீரன் கதை போன்ற வாய்மொழி இலக்கியங்களும் மன்னர் திருமலை நாயக்கரின் காலத்தில் தோன்றியுள்ளன. ஹிந்து மதத்தின் சைவ, வைணவப் பிரிவுகளுக்கு இணைப்பாக மதுரை சித்திரை திருவிழா நிகழ்வுகள் மாற்றியமைத்தது மட்டுமல்லாது புறச்சமயமான கிறித்துவ சமயத்திற்கும் ஆதரவளித்துள்ளார். கிறித்துவ சமயத்து மக்களிடமும் அச்சமயத்துப் பாதிரிமார்களிடமும் மன்னர் திருமலை நாயக்கரின் அணுகுமுறை யாருக்கும் அனுதாபம் தரத்தக்க முறையில் அமைந்த மனிதாபிமானமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இராபர்ட்.டி.நோபிலி போன்றோர் மன்னர் திருமலை நாயக்கரை நேரில் கண்டு வேண்டியதைப் பெற்று கிறித்துவத்தை வளர்த்திருக்கின்றார்கள்.
இத்தகைய சிறப்புகளைப் பெற்று விளங்கிய மன்னர் திருமலை நாயக்கரின் குணநலன்களையெல்லாம் பலவாறாக வரலாற்றாசிரியர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள். திருமலை நாயக்கர் வீரவுணர்வோடு தொடர்ந்து போராடும் மனவலிமை வாய்ந்தவர். சிறந்த சமயநெறியாளர், நாட்டில் நிலவி வந்த பண்பாட்டிற்கும் மரபிற்கும் மதிப்பளித்தவர். அறிவும் ஆற்றலும் சுறுசுறுப்பும் கொண்டவர். தன்னாட்சியை விரும்பிய மனப்பான்மை கொண்டவர். சிறந்த நீதி நெறியாளர். நாட்டில் எழுந்த சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டவர். அன்புள்ளம் கொண்டவர். எதனையும் மனம் திறந்து உடனே பாராட்டும் பண்புள்ளம் கொண்டவர். சிறந்த கலைரசிகர். கலைவிமர்சகர். கலை வல்லாருக்கு மதிப்பளித்தவர் என்று பாராட்டியுள்ளனர். மேலும் தன்னாட்சியில் நிலவிய சமூக முரண்பாட்டையும் சமுதாய முரண்பாட்டையும் ஒழிக்கப் முற்பட்டவர். அதற்காகப் பல ஏற்பாடுகளைச் செய்தவர் என்று
வெளிநாட்டவரும் மன்னர் திருமலை நாயக்கரைப் புகழ்ந்து கூறுகின்றனர். சில செயல்களைக் கண்டு அவரிடத்துக் குறை காண முற்பட்ட வரலாற்றாசிரியர்களும் அதனை அவரிடத்துக் காணும் கரும்புள்ளிகள் எனச் சமாதானம் கொண்டனர். சுருக்கமாகச் சொல்வோமானால் பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மதுரை பாண்டிய நாட்டில் ஆட்சி நடத்திய மாமன்னர்களில் சிறந்த ஆளுமை படைத்த மன்னர்களில் ஒருவராக மன்னர் திருமலை நாயக்கரைக் கூறலாம். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். பொது ஆண்டு 1623 ஆம் ஆண்டு துவங்கி 1659 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பிலிருந்தவர் அவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்தன. எனினும் அவற்றை முறியடித்து அவர் ஆட்சி செய்த பாண்டிய நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிய நாட்டில் பெரும் பகுதி அடங்கியிருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது அக்காலகட்டத்தில் டெல்லி முகலாயப் பேரரசராக இருந்த ஔரங்கசீப், ஒரு விநோதமான வழக்கத்தைப் பின்பற்றியிருந்தார். அவருடைய ஒற்றைச் செருப்பை யானை மேல் அம்பாரத்தில் வைத்து ஊர்வலமாக அனுப்புவார். அதோடு படை ஒன்றும் செல்லும். அந்த ஊர்வலம் செல்லுமிடங்களில் உள்ள அரசர்கள், அந்தச் செருப்புக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்த வேண்டும். அதைக் கௌரவித்து முகலாய அரசுக்குத் திறைப்பணம் செலுத்த வேண்டும். இப்படிச் செய்ய மறுத்தால், அந்த அரசின் மீது முகலாயப்படை வீரர்கள் போர் தொடுப்பார்கள். முகலாயப் பேரரசின் படைபலத்திற்கு அஞ்சி பல அரசர்கள் செருப்புக்குத் தலை வணங்கி, திறை கொடுத்து அனுப்பினர்.
இந்தச் செருப்பு ஊர்வலம், முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில் மதுரைக்கு வந்தது. முத்து வீரப்பர் செருப்புக்குப் பணிந்து போக விரும்பவில்லை. அதே சமயம் முகலாயர்களோடு மோதவும் விரும்பவில்லை. அதனால், தனக்கு உடல் நலம் சரியில்லை என ஔரங்கசீப்பின் செருப்போடு வந்த படைத்தலைவனுக்குச் செய்தியனுப்பிவிட்டு, முத்துவீரப்ப நாயக்கர் திருச்சிராப்பள்ளிக்குச் சென்றுவிட்டார். விடக்கண்டனான முகலாய அரசன் ஔரங்கசீப்பின் படைத்தலைவன் திருச்சிராப்பள்ளிக்குச் சென்றான். செருப்பு ஊர்வலம் திருச்சிராப்பள்ளி அரண்மனையை அடைந்தது. படைத்தலைவன் செருப்பை எடுத்துக்கொண்டு அரண்மனையை அடைந்தான். அதற்குத் தலை வணங்குமாறு முத்துவீரப்ப நாயக்கரை வலியுறுத்தினான். அந்த அவமானத்தைச் சகிக்காத மன்னர் முத்துவீரப்ப நாயக்கர், அந்தச் செருப்பைக் காலில் அணிந்து கொண்டார். மேலும் படைத்தலைவனை நோக்கி ‘ஏனப்பா, உன் அரசர் ஒரு செருப்பை மட்டும் கொடுத்து அனுப்பியிருக்கிறாரே. இன்னொரு செருப்பு எங்கே?’ என்று கேட்டார். இதனால் வெகுண்ட முகலாயப் படைத்தலைவன், தனது படைகளைத் திரட்டிக்கொண்டு முத்துவீரப்ப நாயக்கரின் படைகளைத் தாக்கினான். மதுரைப் படைகள் முகலாய வீரர்களை வெட்டி வீழ்த்தின. முகலாயப் படைவீரன் டெல்லிக்குத் தப்பித்தோம் பிழைத்தோமென ஓடினான். முத்துவீரப்ப நாயக்கரின் துணிச்சலையும் வீரத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டும் நிகழ்வு வில்லியம் டெய்லர் தொகுத்த ‘ஓரியண்டல் ஹிஸ்டாரிக்கல் மனுஸ்கிரிப்ட்ஸ்’ இரண்டாம் தொகுதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சுல்தான் அலாவுதீன் பாதுஷா மற்றும் சுல்தான் ஷம்சுதீன் பாதுஷா ( ஓமானின் சுல்தான்கள் என்று அழைக்கப்படுபவர்) ஆகியோரின் வழித்தோன்றல்கள் அப்போதைய பாண்டிய மன்னர் கூ(ன்) பாண்டியனிடமிருந்து கோரிப்பாளையம் தர்காவின் நிலத்தை ஒரு அடி தங்கத் துண்டிற்கும், மற்ற ஆறு கிராமங்களை (அதாவது பீபி குளம், சொக்கிகுளம், சோளிகுடி, சிறுதூர், கண்ணனேந்தல், திருப்பாலை ) கோரிப்பாளையம் தர்காவின் பராமரிப்புக்காக 14,000 தங்கத் துண்டங்களுக்கு விலைக்கு வாங்கினர் . மதுரை நாயக்கர் ஆட்சியாளர்களின் மன்னர் வீரப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் , துர்காவின் ஹுக்தார்களுக்கும் நாயக்கர் அரசாங்க ஊழியர்களுக்கும் இடையே ஆறு கிராமங்கள் தொடர்பாக அப்போது ஒரு தகராறு எழுந்தது. இந்த வழக்கு மன்னர் வீரப்ப நாயக்கரிடம் கொண்டு செல்லப்பட்டது, அவர் மன்னர் கூ(ன்) பாண்டியன் எழுதிய ஆவணங்களை விசாரித்து சரிபார்த்து, பொது ஆண்டு 1573 ஆம் ஆண்டு தனது தீர்ப்பை வழங்கினார், ஏனெனில் ஆறு கிராமங்களும் தர்கா நிலமும் சுல்தான்களின் சந்ததியினருக்கு சொந்தமானது, மேலும் சூரியன் மற்றும் சந்திரன் இருக்கும் வரை அது அவர்களின் அனுபவத்தில் இருக்க வேண்டும், இதை மீறுபவர்கள் கங்கை நதிக்கரையில் பசுவைக் கொன்ற பாவத்திற்கு பொறுப்பாவார். என தீர்ப்பு வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.
டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் ராணுவத் தளபதி அலி மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பு 1310 ஆம் ஆண்டு துவங்கி 1311 ம் ஆண்டு வரை நடைபெற்றது ......
இந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்தியாவின் பெரும்பாலான ஆலயங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன....
இதில் மதுரை, சிதம்பரம் கோவில்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின.
டெல்லி சுல்தான்களின் ஆதிக்கத்தின் கீழ் மதுரை அரசு வந்தது.
1323 முதல் 1327 வரை டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு மீண்டும் நடந்தது.
இதில் அதிக தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீ ரங்கம் மற்றும் மதுரை கோவில்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான அப்பாவி ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்...
பெரும்பாலான ஹிந்துக் கோவில்கள் கொள்ளையடிக்கபட்டு மூடப்பட்டன.
வாள் முனையில் பலர் மதம் மாற்றபட்டனர்.
1331 ஆம் ஆண்டில் டெல்லி சுல்தானின் பிரதிநிதிகளாக இருந்த மதுரை சுல்தான்கள் மதுரையை டெல்லியின் கட்டுப்பாட்டில் இல்லாத மதுரை சுல்தானிய ராஜ்ஜியமாக அறிவித்துக் கொண்டனர்..
இதற்கு பாபர் சுல்தானகம் என்று பாரசீக மொழியில் பெயரிட்டுக் கொண்டனர்.
அடுத்த 48 ஆண்டுகளில் 8 சுல்தான்கள் மதுரையை ஆட்சி செய்தனர்.
ஹிந்துக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
கிபி 1336. ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் கர்நாடக ஆந்திரா பகுதிகளில் பாமினி சுல்தான்களின் அராஜக ஆட்சியை எதிர்த்து துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு மிகப்பெரிய ஹிந்து சாம்ராஜ்யம் உருவானது .
ஹரிஹரர், புக்கர் என்ற இரண்டு தெலுங்கு நாயக்கர் சகோதரர்கள் சிருங்கேரி மடாதிபதி குரு வித்யாரண்யரின் வழிகாட்டுதலில் இந்த அரசை ஏற்படுத்தியிருந்தனர்.
சிறிது சிறிதாக தென்னிந்தியாவின் பல பகுதிகளை தங்கள் அரசின் கீழ் கொண்டுவந்தனர்.
புக்கரின் மகனான கம்பண்ணர் 1364 ஆம் ஆண்டு வாக்கில் கொண்ட வீடு ரெட்டி அரசின் துணையோடு காஞ்சிபுரத்தின்மேல் படையெடுத்து, அந்த நகரைக் கைப்பற்றி அங்கேயே தங்கியிருந்தார்.
அவரோடு அவர் மனைவியான கங்காதேவியும் வந்திருந்தார்.
கம்பண்ணரின் திக்விஜயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ‘மதுரா விஜயம்’ என்ற பெயரில் ஒரு அழகான காவியமாக எழுதினார் கங்காதேவி.
காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த கம்பண்ணரை சந்திக்க வந்தார் ஒரு பெண்.
தமிழ் பேசும் சேர பாண்டிய சோழ பல்லவ நாட்டின் இருண்ட நிலையைப் பற்றிக்கூறிய அவர், திருவரங்கமும், சிதம்பரமும், மதுரையும் அடைந்த அழிவுகளை எடுத்துரைத்தார்.
அங்குள்ள கோவில்களில் பூஜைகள் நின்றுபோய்விட்டதையும், பல கோவில்கள் மண்ணடித்துப் போனதையும் சொல்லிய அவர், பாண்டியர்களுக்கு இந்திரன் அளித்த வாளை எடுத்து கம்பண்ணரிடம் கொடுத்தார்.
தாம் ஸ்ரீ மீனாட்சி தேவியே என்றும், மதுரையை இந்த வாளின் துணைகொண்டு மீட்குமாறும் சொல்லி மறைந்தார் என்று மதுராவிஜயம் நூல் கூறுகிறது.
தமது படைகளைத் திரட்டிக் கொண்டு 1378 ஆம் ஆண்டு மதுரை நோக்கி வந்தார் குமார கம்பண்ணர்.
மதுரையை அப்போது சிக்கந்தர் கான் என்ற சுல்தான் ஆண்டு கொண்டிருந்தார்.
அவரது படைகள் கம்பண்ணரிடம் தோற்றோடின.
மதுரையை விட்டுத் தப்பித்த சுல்தான், திருப்பரங்குன்றம் மலைமேலேறி ஒளிந்துகொண்டான்.
கம்பண்ணரின் படைகள் திருப்பரங்குன்றம் மலையைச் சூழ்ந்து முற்றுகையிட்டன.
கம்பண்ணர், சிக்கந்தரை தன்னுடன் தனியாக 'ஒண்டிக்கு ஒண்டி ' போரிட வருமாறு அழைத்தார்.
இருவருக்கும் இடையே திருப்பரங்குன்றம் மலை மீது கடுமையான யுத்தம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று, சிக்கந்தரைக் மாறுகால் மாறுகை வாங்கி கழுவில் தொங்க விட்டார்.
கழுவில் தொங்கியபடியே கதரிய சிக்கந்தரை மீட்டு கோரிபாளையத்தில் அவனின் ஆசை நாயகி வீட்டில் சிகிச்சை அளிக்கும் போது மரணித்தான்.
கம்பனரின் படைகளில் இருந்த மதுரை பாண்டிய வீரர்கள் சிலர் சிக்கந்தரின் உடலைத் தேடி அலைந்ததைக் கண்ட சிக்கந்தரின் ஆசை நாயகி அவளின் வீட்டியே அவனின் அழுகிய உடலைப் புதைத்தார்.
சிக்கந்தரின் அழுகிய உடலை புதைத்த அந்த தாசியின் வீடுதான் இன்று கோரிபாளையம் தர்காவாக மிளிர்கின்றன திருப்பரங்குன்றத்தில் நடந்த போரில் வெற்றி பெற்ற கம்பண்ணருக்கு மதுரையிலோ திருப்பரங்குன்றத்திலோ ஒரு சிலை கூட கிடையாது.
ஆனால் மதுரை மக்களை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கி கோவில்களில் வழிபடுவதை தடை செய்த கொடுங்கோலன் சிக்கந்தருக்கு சமாதி இரண்டு இடத்தில் உள்ளதாக வரலாறு பேசப்படுகிறது. மன்னர் திருமலை நாயக்கர் தான் பாண்டிய நாட்டில் ஹிந்து சமய மறுமலர்ச்சி ஏற்படுத்தினார் அதன் வரலாறு மாணவர்கள் அறிவது அவசியமாகும்.
கருத்துகள்