தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர்.
அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை,
அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும், கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில்
அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலையில்.
வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இழுத்தடிப்பு செய்து புகார் கொடுத்த 60 சதவீதம் ஏமாற்றப்பட்ட மக்கள் மட்டுமே காவல்துறை மூலம் புகார் அளித்த நிலையில் தற்போது காத்திருக்கின்றனர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். மீதம் உள்ளவர்கள் நேர்வழியில் பணம் சம்பாதிக்காமல் ஏமாந்த ஊழல் பெருச்சாளிகளின் பணம், இதுவே மோசடிக்காரர்களின் மிகுந்த பலமாக இதுவரை பார்க்கப்பட்ட நிலையில் இனிமேல் அது நடக்கவே நடக்காது. நியோ மேக்ஸ் நிறுவனம் வாங்கிய இதுவரை கணக்கில் வராமல்
மறைந்துள்ள வேறு வேறு இரகசிய சொத்துக்கள் மற்றும் சில இரகசிய முதலீட்டாளர்கள் இனிமேல் தான் கண்டறியப்பட வேண்டும். அதற்கு சிபிஐ விசாரணை வரவேண்டும். இதில் முக்கியப் புரோக்கர்கள் மற்றும் ஏற்காடு, கொடைக்கானல் ,ஊட்டி என உல்லாச சுற்றுலாவிற்கு கும்பல் கும்பலாக அழைத்துச் சென்று கவணிக்கப்பட்ட பலரும் நன்கு பேசத் தெரிந்த நபர்களை பயன்படுத்தி ஆசை வார்த்தைகளை கூறி இவர் சில்வர் இவர் கோல்டன் அதிகமாக ஏமாறப்போகும் நபர் பிளாட்டினம் என்பதாக பட்டங்கள் வழங்கப்பட்டு ஏமாற்றியவர்கள் என இதுவரை வெளிவராத விசாரணைக்கு வராத பல தகவல்கள் இனிமேல் தான் வெளிச்சத்திற்கு வரும்.
முதலீட்டு கருப்புப் பணங்களை கண்டறிய மத்திய அமலாக்கத்துறை முயலும், அதோடு இல்லாமல் மணி சூதாட்டம் எனப்படும் ஒரே நிலத்தை பலருக்கு பத்திரப்பதிவு செய்யாமல் பதிவில்லாத பத்திரங்கள் மூலம் ஒரு பிளாட்டை நான்கு பேருக்கு விற்பனையாக எழுதிக் கொடுத்த நிகழ்வுகளும் அதை அவர்களிடமே திரும்பக் கொடுத்தால் பணம் இரட்டிப்பு என சூதாட்டம் நடந்துள்ள நிலையில், அதை இனி இந்தியாவின் பங்குச்சந்தை நிர்வாகம் கவணிக்கும் செஃபி. விசாரணை நடத்த முன்வரும். காரணம் இவர்கள் பணம் முதலீடு மக்களிடம் பெறுவதற்கு முன்னர் செபி யின் அனுமதி தேவை ஆனால் அதை அவர்கள் பெறவில்லை. என்பதும் இங்கு கவணிக்கப்பட வேண்டும்.
பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக
நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோருக்கு
இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்ததன் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் படி வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் பல காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களும் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், நிர்வாக இயக்குநர்களான பொருளாதார மோசடிக் குற்றவாளிகள் மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், திருச்சிராப்பள்ளி வீரசக்தி மற்றும் காரைக்குடி சூடாமணி நகரில் வசித்து வந்த நபர் உள்ளிட்ட 90 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து, 35க்கும் மேற்பட்டோரை மட்டுமே கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தற்போது விசாரணையில் உள்ளது.
முன்னதாக விசாரணையின்போது," நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை மாநில அரசு முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த அக்டோபர் மாதம் கேள்வி எழுப்பியது. ஆனால் அரசு அதை முடக்கவில்லை
இந்த நிலையில், மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை PMLA ன் பிரிவு 17 ன் கீழ் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அதிகாரத்தை ED பயன்படுத்தி அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நியோ மேக்ஸ்-க்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய
ரூபாய்.600 கோடி சந்தை மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணம் மோசடி செய்தது தொடர்பாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏராளமானவர்களை கைது செய்தனர். அவர்களில் சிலர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். இந்தநிலையில் நிதிநிறுவன மோசடி வழக்கில் சிக்கியவர்களை ஜாமீனில் விடுவித்ததற்கு எதிராக நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தவர்களை ஜாமீனில் விடுவித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்கள்சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி குறித்து 23 ஆயிரத்து 649 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் செலுத்திய முதலீட்டுக்குப் பதிலாக பணமாகவோ, நிலமாகவோ பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவிப்பது அவசியம் எனக் கூறினார். பணத்தை இழந்ததாக 23,649 பேர் மட்டுமே புகார் அளித்தனர்.
மீதியுள்ள நபர்கள் பணத்தை இழந்தவர்களுக்கு திரும்ப வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என குழு யார் என்ற விபரங்கள் இல்லாமல் தகவல் தெரிவிக்கப்பட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை இதுவரை ஏன் முடக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், 2024 அக்டோபர் 19 ஆம் தேதிக்குள் அச்சொத்துக்களை முடக்கி, அரசாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அதைச் செய்ய வில்லை என்ற நிலையில் நியோமேக்ஸுக்கு கைகொடுக்கும் ஒரு பிரபலமான பெயர் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனம். பின்னணியில் நியோமேக்ஸ் வசம் இருக்கும் நல்ல நிலங்களை வாங்கிக் கொண்டு, பிரச்னையிலிருந்து மேற்கண்ட பணமோசடிக் குற்றவாளிகளை விடுவிப்பதே அவர்கள் டீல் என பேசப்படுகிறது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் விபரம் அறிந்தவர்கள் இந்த நிலையில் நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் குழு நிறுவனங்கள் மற்றும் பிறவற்றின் வழக்கில், 2002 ஆம் ஆண்டு PMLA விதிகளின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரூபாய். 121.80 கோடி (தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூபாய். 600 கோடி) மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, சென்னை மண்டல (ED) அமலாக்கத்துறை அலுவலகம் 09.04.2025 ஆம் தேதி அன்று தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. இனி செஃபி வந்து விடும் உள்ளூர் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையின் மூலம் லஞ்ச லாவண்யங்கள் இனிமேல் எடுபடாது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள அசையும் அசையா சொத்துகள் நியோமேக்ஸ் கணக்கில் ரூபாய்.12.1.80 கோடி (அதன் தற்போதைய மதிப்பு ரூபாய்.600 கோடி) நியோமேக்ஸ் பிராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் கம்பெனிகள் சட்டப் படி பதிவு செய்து பங்கு வர்த்தகச் சட்டம் மற்றும் நிதி முதலீட்டு சட்டத்தை ஏமாற்றியவர்கள் ஆகும்
www.neomaxgroup.com என்ற வலைத்தளம் செயலில் புதுப்பிக்கப்பட்டுள்ளது: 23 அக்டோபர் 2024 ஆம் தேதி
நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட், நவம்பர் 14, 2013 அன்று இணைக்கப்பட்ட ஒரு பட்டியலிடப்படாத தனியார் நிறுவனம். இது ஒரு தனியார் லிமிடெட் நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டது மற்றும் தமிழ்நாட்டின் மதுரையில் தலைமையிடம் அமைந்தது. இதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் INR 4.00 கோடி மற்றும் மொத்தம் செலுத்தப்பட்ட மூலதனம் INR 1.40 கோடி.
நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸின் செயல்பாட்டு வருவாய் வரம்பு INR 1 கோடி முதல் 100 கோடி வரை தான் (ஆனால் மோசடி நடந்ததோ 5000 கோடி) மார்ச் 31, 2020 அன்று முடிவடைந்த நிதியாண்டில். இதன் EBITDA முந்தைய ஆண்டை விட 198.66 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், அதன் புத்தக நிகர மதிப்பு 46.85 சதவீதம் அதிகரித்தது.
நியோமேக்ஸ் பிராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட்டின் தற்போதைய நிலை - செயலில் உள்ளது.
பதிவுகளின்படி, நியோமேக்ஸ் பிராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட்டின் கடைசியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30, 2022 அன்று நடைபெற்றது.
இந்த நிறுவனத்தில் மூன்று இயக்குநர்கள் அதில் சங்கரபாண்டி பாலசுப்பிரமணியன், சண்முகம் கமலக்கண்ணன் மற்றும் துரைக்கண்ணு வீரசக்தி. ஆகும்
நியோமேக்ஸ் பிராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவன அடையாள எண் (CIN) U70109TN2013PTC093705. இதன் பதிவு செய்யப்பட்ட முகவரி ரிக்கி டவர் - IIND FLOOR, NO-85, சுப்பிரமணியபிள்ளை தெரு,எஸ் எஸ் காலணி, பைபாஸ் சாலை, மதுரை, தமிழ்நாடு - 625016. ஆகும். மதுரை காவல்துறை பொருளாதாரக் குற்றப்பிரிவில் கடந்த 20.06-2023- ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் 5 . ஆகும் அதில் குற்ற எண் 03/2023 முதல் தகவல் அறிக்கை படி u/s 406, 420 r/w 34 IPC & Section 5 of TNPID Act and 3, 4, 5, 21 (1) (2) (3), 22, 23, 25 of BUDS L 2019 புலன் விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட " 1. நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், 2.கார்லாண்டோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், 3.ட்ரான்ஸ்கோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், 4.டிரைடாஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
5.குளோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்” மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் ஆன,
(i) நியோமேக்ஸ் ரியல்டார்ஸ் பிரைவேட் லிமிடெட்,
(ii) நியோமேக்ஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
(iii) சென்ட்ரியோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
(iv) ரிகாரியோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (v) அட்வெண்டாஸ் குளோபல் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்,(vi) எக்ஸ்புளோரா ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட், (vii) சப்ரோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (viii) அட்லாண்டினோ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், (ix) லோமி பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (x) ரெபாக்கோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (xi) லிபர்ட்டாஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (xii) அஸ்டோனிஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (xiii) மில்லியானா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்,(xiv) லிவ்பிரைட் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (xv) எஸ்.டி.சி.எஸ்.லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட், (xvi) க்ரீன் ராயல் ரீடெய்ல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், (xvii) சில்வர்கார்ப் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (xviii) டெட்ரா குளோபல் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (xix) லிவ்ஸ்மார்ட் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (xx) வென்டூரா டெவலப்பர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆகும். இனி உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கும் தீர்ப்பு அடிப்படையில் நடவடிக்கைகள் அமையும் என்றாலும் நாம் முன்பே எதிர்பார்த்தபடி வழக்கில் மத்திய அரசின் அமலாக்கத்துறை வந்துள்ளது இனி செஃபி தானே வந்து விடும். நிலத்தை வாங்க ரியல் எஸ்டேட் நிறுவனம் காத்திருக்கும் நிலை என்பது இளவு காத்த கிளி கதை தான்.பழம் பழுக்காது .ஊழல் இனி .பஞ்சு பஞ்சாகப் பறக்கும் .SEBI (மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளின் தடை) விதிமுறைகள் மூலம் பத்திரங்களில் மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கிறது.
செபி விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் சந்தை மோசடிகளைத் தடுக்கிறது. இதில் பொது நீதி யாதெனில்:- கை முதல் போடாமல், நிலத்தை வைத்து வேறு வகையில் MLM நடத்த சிந்தனை செய்தவர்கள் மிகப் பெரிய சதுரங்க வேட்டைக்காரர்கள். இவர்கள் தற்போது சிக்கியது இன்னொரு சதுர பெயர் கொண்ட குரூப்பிடம் , இப்போது அவர்கள் மோசடி செய்த முதலுக்கே மோசம் அனுபவ் தேக்கு மரம் நடுதல், ஈரோடு ஈஃமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங்.இருடியம் போன்ற மக்களை ஏமாற்றும் நபர்களின் மோசடி உத்திகளைக் கையாண்டு ஒரே நிலம் ஆஹா..ஓகோனு வாழ்க்கை ...இப்படி ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்று சொன்னால், முதலில் அவர்களது ஆசையைத் தூண்ட வேண்டும் என்று ஃபார்முலா படி கருப்புப்பண முதலைகள் பணம் இரட்டிப்பு என்றவுடன் தாங்கள் ஊழல் பணத்தை முதலீடு செய்ய சரியான இடம் இது தான் என் நினைத்து செய்த முதலீட்டுக்கே மோசம் வந்தது. நியோ மேக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் எல்லோருக்கும் இராமக்கட்டி வாங்காமலே இராமம் போட்டதை வெளியே சொல்லாதவர்கள் தான் அதிகம். புகார் கொடுத்து காத்திருக்கும் மக்கள் எதாவது லாபம் வராதா என முதலீடு செய்து ஏமாந்த நபர்கள் தான் பாவம். "ஊரை அடித்து உலையில் போடும் கூட்டமே எப்படா அப்பா ஓயும் உங்கள் ஆட்டமே !".
கருத்துகள்