துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ -
குற்றஞ்சாட்டும் ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு துணைவேந்தர்கள் எந்த சிரமமும் கொடுக்கவில்லை. மாநாட்டில் பங்கேற்ற ஒன்பது துணை வேந்தர்களில் மத்திய அரசின் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் தவிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், யார் - யார் என்று மட்டும் பார்க்கவேண்டிய நிலை இருக்கிறது. விழாவுக்கு 'நம்பி' வந்த குடியரசுத் துணைத்தலைவர் தமிழ்நாடு அரசியல் நிகழ்வுகள் நன்கு அறிவார்
துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது என குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி
மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் துணை வேந்தர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியின. ஆனால், மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், பெரும்பாலான துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
துணை வேந்தர்கள் மாநாடு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உதகமண்டலம் ராஜ்பவனில் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி முதலமைச்சர் செயல்படுவார் என தி.மு.க அரசு கொண்டாடி வந்த நிலையில், துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு இருப்பதாகவும் கவர்னரே வேந்தராகத் தொடர்கிறார் எனவும் ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதனால், `மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா’ என்ற குழப்பத்தில் துணை வேந்தர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியின. ஆனால், மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பெரும்பாலான துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். துணை வேந்தர்களுக்குப் பதிலாக பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
நண்பகல் 12 மணியளவில் மாநாடு தொடங்கிய நிலையில் தொடக்க உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி , " கல்வி வளர்ச்சி, உயர் கல்வி மேம்பாடு போன்ற நல்ல நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படும் இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலரையும் பங்கேற்க விடாமல் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியிருக்கிறது. துணை வேந்தர் ஒருவரின் வீட்டிற்கே சென்று மிரட்டியிருக்கிறார்கள். மற்றொரு துணை வேந்தரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர் என தமிழ்நாடு அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் துணை வேந்தர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியின. ஆனால், மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், 34 நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெரும்பாலான துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.மிகத் தெளிவாக பிரிவு, 154 ல் அரசு நிர்வாகத்தின் அதிகாரம் ஆளுனரிடம் உள்ளது. அதை அவர் நேரிடையாகவோ, தனக்குக் கீழே உள்ள நிர்வாகிகள் வாயிலாகவோ பயன்படுத்தலாம். இதன் பொருள், அரசின் நிர்வாக அதிகாரம் ஆளுனரிடம் இருந்தே உருவாவதால், அவரே அதன் தலைவர். அடுத்ததாக பிரிவு, 163 ஆளுனருக்கு உதவி செய்யவும், ஆலோசனை கூறவும், முதல்வரின் தலைமையில் ஒரு மந்திரி சபை இயங்கும். வானளாவிய அதிகாரம் பெற்றிருந்தாலும், முதல்வர், மந்திரி சபைக்குத்தான் தலைவரேயன்றி, அரசின் தலைவர் அல்ல. இறுதியாக பிரிவு, 166 மிகத் தெளிவாக, 'மாநில அரசின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுனரது பெயரால் நடைபெற வேண்டும்' எனச் சொல்கிறது. ஆளுனரின் கையெழுத்து இல்லாமல் எந்த அரசாணையும் பிறப்பிக்க முடியாது. இதிலிருந்து தமிழ்நாடு அரசு என்றால், சட்டப்படி அது ஆளுனரை மட்டுமே குறிக்கும். எனவே, தற்போது தமிழ்நாடு அரசு கொண்டு வந்து, உச்ச நீதிமன்றம் தலையிட்டு எதை செய்ய நினைத்தார்களோ, அதை அவர்களே முறியடித்துக் கொண்டனர்.காரணம் முன்னர் வேந்தர் என்ற அதிகாரத்தில், துணைவேந்தர்களை நியமித்த ஆளுனர், இப்போது அரசின் தலைவர் என்ற முறையில், அதே அதிகாரத்தைப் பெறுகிறார். இதை நம்முடைய இந்த வாதத்திற்கு வலு சேர்க்கின்றனர் கேரள முதல்வர் பினராயி விஜயனும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும். கேரள அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில், வேந்தர் என்பதற்கு பதிலாக, மந்திரி சபை என்று மாற்றியுள்ளனர்.
கருத்துகள்